இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர, கேரளா ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 93 நாட்களுக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 83 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,233 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு சதவீதம் 1.67% ஆகவும் வார கொரோனா பாதிப்பு சதவீதம் 1.12 % ஆகவும் உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுகள் 93 நாட்களுக்குப் பிறகு 5,000 க்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன, மொத்த COVID-19 பாதிப்பு எண்ணிக்கை 4,31,90,282 ஆக உள்ளது, அதே நேரத்தில் தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 28,857 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவு தெரிவிக்கிறது.
இதையும் படிக்க: கேரளா தங்கம் கடத்தலில் பினராயி விஜயன், குடும்பத்தினருக்கு தொடர்பு... ஸ்வப்னோ சுரேஷ் அதிர்ச்சி தகவல்
ஏழு புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,24,715 ஆக உயர்ந்துள்ளது,மும்பையில் செவ்வாயன்று 1,242 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய நாளின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும்.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. அதற்கு முந்தைய நாளில் இந்த எண்ணிக்கை 90 ஆக மட்டுமே இருந்தது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 48-ல் இருந்து 82-ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.