முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் 175 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை -மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

இந்தியாவில் 175 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை -மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

இந்தியாவில் 1.89 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

இந்தியாவில் 1.89 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

இந்தியாவில் 1.89 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

  • Last Updated :

இந்தியாவில் இதுவரை 175 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு வரையிலான புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் 175 கோடி டோஸுக்கு மேலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 1.89 கோடிபேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பதிவில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் பிரதமர் மோடியின் தலைமையில் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களைத் தொட்டு, புதிய சாதனைகளை செய்து வருகிறது” எனப் பதிவிட்டுள்ளார்

First published:

Tags: Corona, Corona Vaccine, Covid-19 vaccine, Covishield, India, Modi, Vaccine