Home /News /national /

200 கோடி தடுப்பூசி டோஸ்கள்.. கொரோனா தடுப்பூசி திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா!

200 கோடி தடுப்பூசி டோஸ்கள்.. கொரோனா தடுப்பூசி திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா!

200 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலக்கை தொட்ட இந்தியா

200 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலக்கை தொட்ட இந்தியா

நாட்டின் மக்கள் தொகையில் 96 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசியும், 87 சதவீதத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

    நாட்டின் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்திய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது. 2020ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று பரவத் தொடங்கிய நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்ற பேரில் 2021ஆம் ஆண்டில் கோவிட் தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், பின்னர் முன்களப் பணியாளர்கள், அடுத்து மூத்த குடிமக்கள் என பல கட்டங்களாக இந்த கோவிட் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

    திட்டம் கடந்து வந்த பாதை

    • ஜனவரி 16, 2021 - சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது

    • பிப்ரவரி 2, 2021 -முன்களப் பணியாளர்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது

    • மார்ச் 1, 2021 - 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 45 வயதை கடந்து இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்

    • ஏப்ரல் 1, 2021 - 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்

    • மே 1, 2021 - வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் விரிவாக்கம்

    • அக்டோபர் 21, 2021- 100 கோடி டோஸ் இலக்கை கடந்து சாதனை

    • ஜனவரி 3, 2022 - 18 வயதுக்கும் குறைவான சிறார்களுக்குத் தடுப்பூசி திட்டம் தொடக்கம்

    • ஜனவரி 10, 2022 - பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடக்கம்

    • ஜூலை 15, 2022 - 75 நாள்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசம் என அறிவிப்பு

    • ஜூலை 17, 2022 - 200 கோடி டோஸ் இலக்கை கடந்து சாதனை


    200 கோடி டோஸ் என்ற இலக்கை இந்தியா 18 மாதத்தில் எட்டியுள்ளது. தடுப்பூசி பயனாளர்களில் 5.5 கோடி பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் 96 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசியும், 87 சதவீதத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளாராக ஜக்தீப் தங்கர் தேர்வு..'விவசாயி மகன்' என பிரதமர் மோடி புகழாரம்!

    அதேவேளை, 18-59 வயதினரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். இந்த வயதினரை ஊக்குவிக்கும் விதமாகத்தான் 75 நாள்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 200 கோடி டோஸ் தடுப்பூசி சாதனையை பாராட்டி சுகாதரத்துறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Corona Vaccine, Cowin, Health Minister, Vaccination

    அடுத்த செய்தி