முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை கடந்தது...!

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை கடந்தது...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73,979 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 69,48,497 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் இதுவரை 10 கோடி மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,366 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 77,61,312 ஆக உயர்ந்துள்ளது.

Also read... கொரோனா பரிசோதனை முடிவை ஒரு மணிநேரத்தில் அறிந்துகொள்ள உதவும் 'கோவிராப்'.. ஐ.சி.எம்.ஆர் அனுமதி

690 பேர் புதிதாக உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்புகள் 1,17,306 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடந்த 1 வாரத்தில் மட்டும் 1 லட்சம் பேர் குறைந்து 7 லட்சத்துக்கும் கீழ் சென்றுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 6,95,509 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73,979 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 69,48,497 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 10,01,135 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 14,42,722 புதிய பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

First published:

Tags: CoronaVirus