Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் : மத்திய அரசு கொடுத்த ஆறுதல் தகவல்!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் : மத்திய அரசு கொடுத்த ஆறுதல் தகவல்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் ஒருவர் கூட கொரோனாவுக்கு சிகிச்சை பெறவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் வாரத்திற்கு வாரம் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவி வரும் உருமாறிய பிஎஃப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் நுழைவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மீண்டும் கொரோனா விதிமுறைகள் அமலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு விகிதம் வாரத்திற்கு வாரம் குறைந்துகொண்டே வருகிறது. அக்டோபர் 7- 13ஆம் தேதி வரை 1.05 என்ற அளவில் கொரோனா பாதிப்பு விகிதம் இருந்தது. கடந்த 16 முதல் 22ஆம் தேதி வரை ஒரு வாரத்தில் 0.14 சதவிகிதம் பேருக்கு மட்டுமே பாதிப்பு பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் ஒருவர் கூட கொரோனாவுக்கு சிகிச்சை பெறவில்லை எனவும், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் மிகக் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இருந்தாலும் கூட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கொரோனாவை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளையும் உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன், படுக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தி கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Covid-19