இந்திய அளவில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு

கோப்புப் படம்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது ஒரு மாத காலமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட பாதிப்பைவிட தற்போது அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது.

  நேற்றைக்கு முந்தைய தினத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 1.28 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் உயிரிழந்துள்ளனர்.

  மொத்த கொரோனா உயிரிழப்பு 1,66,177 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 55,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3,500-க்கும் அதிகமாக உள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: