Home /News /national /

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...

Corona Cases In India

Corona Cases In India

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைவிட 56.5% கூடுதலான எண்ணிக்கையில் இன்று பாதிப்பு பதிவாகி உள்ளது. ஓமைக்ரான் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பாதிப்பு சமீப வாரங்களாக கடுமையாக அதிகரித்து நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் 3ம் அலை பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 325 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 19,206 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். பாசிட்டிவிட்டி ரேட் 6.43% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,85,401 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 4,82,876 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 148.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    Also read:  குடும்ப வாழ்க்கையை தொடங்க 'நல்ல நேரம்' அமையவில்லை என 11 ஆண்டுகளாக கணவரை காக்க வைத்த மனைவி - பரபரப்பு வழக்கு

    நேற்றைய தினம் 58,097 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது.

    நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 25,538 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 15,133 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது கவனிக்கத்தக்கதாகும். மும்பையில் மட்டும் பாசிட்டிவிட்டி விகிதம் 25% ஆக உள்ளது. அப்படியென்றால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் நான்கில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

    Also read:  பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

    மகாராஷ்டிரா, மேற்குவங்கம், கேரளா, தமிழகம், டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இம்மாநிலங்களில் தான் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.

    இதனிடையே நாட்டில் ஓமைக்ரான் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி