இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 49 ஆயிரத்து 948 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாசிட்டிவ் ரேட் 0.46 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 8,055 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்றளவிலும் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 6 ஆயிரத்து 150 ஆக உள்ளது. 108 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள். இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 395 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதில் 3,993 பேரிடம் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை நாடு முழுவதும் 77.43 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 179.13 கோடி கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க -
ரஷ்யா - உக்ரைன் மோதல்: மருத்துவக் கல்வி நிறுவனம் அமைக்க தீவிரம் காட்டும் ஆனந்த் மஹிந்திரா
தமிழகத்தை பொருத்தளவில் நேற்று மாலை வெளியிடப்பட்ட கொரோனா குறித்த அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 158 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.
அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை. ஒரே நாளில் 512 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.