ஒரே நாளில் 3.49 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு: 2,767 பேர் உயிரிழப்பு

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.49 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,767 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாது அலை சுனாமி போல மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. முதல் அலையில் காணத பாதிப்புகளை இந்தியா தற்போது எதிர்கொண்டுவருகிறது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றன. கடந்தமுறை பாதிக்கப்படாத பலரும் இந்தமுறை பாதிப்பை எதிர்கொள்கின்றனர். டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் காரணமாக ஏராளமானோர் உயிரிழக்கும் சூழலும் இருந்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதித்துவருகின்றனர்.

  இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,49, 691 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 1,69,60,172 ஆக அதிகரித்துள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 1,92,311 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 26,82,751 ஆக அதிகரித்துள்ளது. இதுமொத்த பாதிப்பில் 15.82 சதவீதம் ஆகும்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: