இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. தற்போது வரை கொரோனாவால் பரவல் கட்டுப்படுத்த முடியாமல் இருந்துவருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டை தற்போது வேகமாக பரவவருகிறது. இந்தியாவில் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.61 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 879 பேர்
கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 52,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 13,600 பேருக்கும், சத்திஸ்கரில் 13,600 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சம் பேருக்கு
கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. இதுவரையில், 10.85 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. அதில், 9.50 கோடி பேர் ஒரு டோஸ் மட்டுமே எடுத்துள்ளனர். 1.35 கோடி பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பு மருந்தையும் எடுத்துள்ளனர். உலக அளவில் ஒரு நாளில் அதிக கொரோனா பாதிப்பு நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
\
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.