63 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்துக்கும் குறைந்த கொரோனா பாதிப்பு

மாதிரி படம்

இந்தியாவில் 63 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்துக்கு குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியது. முதல் அலையை ஒப்பிடும் இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் மிக வேகமாக இருந்தது. மேலும், முதல் அலையின் தொடக்கத்திலே நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கொரோனா பரவல் வேகம் குறைவாக இருந்தது. ஆனால், இரண்டாவது அலையில் ஊரடங்கு இல்லாத காரணத்தாலும், வைரஸின் தன்மையின் காரணமாக கொரோனா பரவல் வேகம் மிக வேகமாக இருந்தது.

  அதனால், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, கடந்த 10 தினங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் வேகம் மெல்ல குறையத் தொடங்கியது. தற்போது, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைந்துள்ளது. சுமார் 63 நாள்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 2,89,96,473 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,82,282 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 2,73,41,462 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 13,03,702 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2,123 பேர் உயிரிழந்துள்ளனர்.

  அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3,51,309 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில், 23,61,98,726 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: