Home /News /national /

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு

Assam Corona Update

Assam Corona Update

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

    இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2,35,532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்சத்தை எட்டியது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் இருந்தது. அதனையடுத்து, ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலங்களுக்கு ஏற்றவகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தனர்.

    இந்த கொரோனா மூன்றாவது அலையில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருந்தது. மேலும், கொரோனா பரவல் விரைவில் குறையத் தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ‘இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 17,59,434 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 2,35,532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 20,04,333 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இருப்பினும், 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் வீட்டுத் தனிமையில்தான் இருந்துவருகின்றனர்.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்பவர்களின் விகிதம் 93.89 சதவீதமாக உள்ளது. நேற்று ஒரு நாளில் 3,35,939 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 13.39 சதவீதமாக உள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus

    அடுத்த செய்தி