• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கடந்த ஆண்டு ஊரடங்கின்போதே மக்களுக்கு நிதி உதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல்!

கடந்த ஆண்டு ஊரடங்கின்போதே மக்களுக்கு நிதி உதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனாவின் 2வது அலை குறைந்து 3வது அலை குறித்த அச்சத்துடன் இந்தியா உள்ள நிலையில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு போன்ற பொருளாதாரம் சார்ந்த வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு குறைந்தப்பட்ச  வருவாய் ஆதரவு வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன

  • Share this:
கொரோனா முதல் அலை காரணமாக நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதே ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசனையில் ஈடுபட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுகாதாரப் பாதிப்பு ஒருபுறம் இருக்க, ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு பறிபோய், ஏழை மக்கள் பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, மத்திய அரசு குறைந்தபட்ச நிதி உதவியை வழங்க வேண்டும் என காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன. தமிழகத்தைப் பொருத்தவரை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் என இரண்டு தவணையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து  நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் முதல் அலையின்போதே ஏழை மக்களுக்கு   நிதியுதவி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தியதாக  தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவரும் இந்தியாவின் முதல் தலைமை புள்ளியியல் நிபுணருமான ப்ரொனாப் சென்  மணி கண்ட்ரோல் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில்  நாடு தழுவிய ஊடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, அதனால் பாதிக்கபட்ட கிராமப்புற மற்றும் நகரப்புற ஏழைகளுக்கு மாதம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை தற்காலிக வருவாய் வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக ஃப்ரொனாப் சென் கூறியுள்ளார்.

வறுமைக்கு தீர்வு காணவும், தகுதிவாய்ந்த ஏழைகளுக்கு மானியங்கள் சென்று சேர்வதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும், அடிப்படை வருவாய் திட்டம் என்பதற்கான யோசனை  நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஒரு சில பொருளாதார வல்லுநர்கள் விவசாயிகளுக்கு மட்டும் நிதி உதவி அளிக்க ஆதரவு தெரிவிக்கும் நிலையில், சிலர் அனைத்து மக்களுக்குமான பரந்த திட்டத்தை ஆதரிக்கின்றனர்.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் போன்றோர் மாதம் 1,500 ரூபாய் என்ற வீதத்தில் ஆண்டுக்கு 18 ஆயிரம் ரூபாயை கிராமபுற ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதன் மூலம், ஆண்டுக்கு 2.64 லட்சம் கோடி அல்லது ஜி.டி.பி.யில் 1.3 சதவிதம் செலவாகும்.

ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.4 சதவீதமாக குறைந்தது. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையமான சி.எம்.ஐ.இ.யின் படி, சுமார் 12 கோடி வேலைகள் காணாமல் போனது, இதில் 9 கோடி பேர் தினக்கூலிகளும் முறைசாரா தொழிலாளர்களும் ஆவர்.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 23.52 சதவீதமாக உயர்ந்தது. பின்னர்  அந்த ஆண்டு மே மாதத்தில் 21.73 சதவீதமாகவும் ஜூன் மாதத்தில் 10.18 சதவீதமாகவும் குறைந்துபோனது.

மேலும் படிக்க: பிளாஸ்ட் ஸ்டூல் மூலம் தற்காப்பு: 4 போலீசார் சஸ்பெண்ட்...

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை குறைந்தபோதிலும் முறைசாரா தொழிலாளர்களில் வேலைவாய்ப்பை இழந்த 9 கோடி பேரில் பாதி பேருக்கும் மாதம் ரூ.6000 வழங்க வேண்டுமென்றாலும் அரசுக்கு  ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.  ஆனால் அரசு இந்த திட்டத்தை தொடங்கவில்லை.  முறைசாரா அமைப்பில் வேலைவாய்ப்பை இழந்தவர்களின்  தகவல், செயல்பாட்டில் உள்ள ஜன் தன் கணக்கு போன்றவற்றின் தரவுகள் கிடைப்பதில் சிரமம் இருந்ததால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை என ப்ரொனாப்  சென் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

ஜன் தன் கணக்கில் 20 சதவீதம் வரை செயல்பாட்டில் இல்லை என கடந்த ஜனவரி 2020ல் மக்களவையில் நிதியமைச்சகம் கூறியிருந்தது. 2 ஆண்டுகளாக எவ்வித பரிவர்த்தனையில் ஈடுபடாத வங்கி கணக்குகளை செயல்பாட்டில் இல்லாத கணக்குகள் என்று ரிசர்வ் வங்கி வகைப்படுத்துகிறது. ஜூன் 2021 கணக்கின்படி 42.47 கோடி ஜன் தன் கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ல் பல்வேறு நாடுகளுக்கும்  பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தங்களின் மக்களுக்கு நிதியுதவி வழங்கியது. கொரோனாவால் வருமானத்தை இழந்தவர்களுக்கு கனடா மாதம் 1,400 டாலரை வழங்கியது. அமெரிக்கா 1200 டாலரையும் தென் கொரியா 820 டாலரையும் ஜப்பான் 931 டாலரையும் வழங்கியது.

நிதி ஆதரவு வழங்க வேண்டிய தேவை

தற்போது கொரோனாவின் 2வது அலை குறைந்து 3வது அலை குறித்த அச்சத்துடன் இந்தியா உள்ள நிலையில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு போன்ற பொருளாதாரம் சார்ந்த வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு குறைந்தப்பட்ச  வருவாய் ஆதரவு வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன.

நோமுரா தலைமை பொருளாதார நிபுணர் சோனல் வர்மா மணி கண்ட்ரோல் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஏழைகளுக்கு தற்காலிக  ஊதிய ஆதரவை வழங்க  வழிமுறைகள் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், மோர்கன் ஸ்டான்லி தலைமை இந்திய பொருளாதார நிபுணர் உபாசனா சக்ரா போன்றவர்களின் கருத்து  வேறு விதமாக உள்ளது.

இதையும் படிங்க: தம்பி வா, தலைமை ஏற்க: சர்ச்சையை ஏற்படுத்தும் விஜய் ரசிகர்கள்...

இவ்வாறு வங்கிகளில் செலுத்தப்படும் வருவாய் என்பது  வங்கிகளில் சேமிப்பாய் இருக்குமே தவிர  நுகர்வுக்கு அதிகம் செலவிடப்படாது என்று  ராஜிவ் குமார் மணி கண்ட்ரோல் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய அரசு, ஏழைகளுக்கான நிதி உதவி வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து முடிவு செய்ய விரும்பினார், அதனை உடனடியாக தொடங்க வேண்டும் என்று ஃப்ரோனாப் சென் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: