இந்தியாவில் உலகிலேயே பெரிய அணு மின் உற்பத்தி நிலையம் : பிரான்ஸ் நிறுவனம் உறுதி

இந்தியாவில் உலகிலேயே பெரிய அணு மின் உற்பத்தி நிலையம் : பிரான்ஸ் நிறுவனம் உறுதி

அணு மின் உற்பத்தி நிலையம். மாதிரிப்படம்.

இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையம் கட்டப்படவுள்ளதாக பிரான்ஸைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான EDF தெரிவித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையம் கட்டப்படவுள்ளதாக பிரான்ஸைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான EDF தெரிவித்துள்ளது.

  இந்த உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத் திட்டம் பல ஆண்டுகளாக எதிர்ப்பினால் நிறைவேற்றப்பட முடியாமல் உள்ளது.

  மகாராஷ்டிராவின் ஜைதாபூரில் இதற்கான பொறியியல் உபகரணங்களை வழங்கி ஆறு 3ம் தலைமுறை இபிஆர் ரியாக்டர்களை உருவாக்க உதவுவதாக ஈடிஎஃப் நிறுவனம் முன் வந்துள்ளது.

  இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தால் இந்த அணுமின் நிலையத்திலிருந்து 10 கிகாவாட்கள் மின்சாரம் கிடைக்கும் அதாவது சுமார் 7 கோடி வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கும் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்கிறது பிரான்ஸ் ஈடிஎஃப் நிறுவனம்.

  கட்டுமானம் முடிவடைய 15 ஆண்டுகள் ஆகும் என்றாலும் முழுமையாக நிறைவடையும் முன்னரே மின்சார உற்பத்தி மேற்கொள்ள முடியும்.

  இதற்கான ஒப்பந்தம் ‘வரும் மாதங்களில் நிறைவடையும்’ என்று ஈடிஎஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் மின் ஆலையை கட்டுமானம் செய்யாது ஆனால் அணு உலைகளை சப்ளை செய்யும்.

  பொதுத்துறை நிறுவனமான இந்திய அணு மின் நிறுவனம் இந்தியாவின் அணு எரிசக்தி துறையைக் கட்டுப்படுத்துகிறது. இந்த உலகின் மிகப்பெரிய அணு மின் ஆலை நிறுவப்படுவதற்கான பட்ஜெட் விவரம் வெளியாகவில்லை. நிச்சயம் பல பில்லியன் யூரோக்கள் கொண்டதாக இதன் பட்ஜெட் இருக்கும் என்கின்றனர்.

  2011-ல் புகுஷிமா அணுக்கசிவு துயரச் சம்பவத்துக்குப் பிறகு இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. சிவசேனா இந்த அணுமின் திட்டத்தை பெரிய அளவில் எதிர்த்தது.

  இந்த அணு மின் நிலையத் திட்டத்தின் கட்டுமான கட்டத்தில் 25,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் பிறகு 2,700 பேருக்கு நிரந்தர வேலை கிடைக்கும் என்றும் ஈடிஎஃப் கூறுகிறது.

  இப்போது இந்தியாவில் 22 ரியாக்டர்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் பிரஷரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்டர்கள் ஆகும், நாட்டின் மின்சாரத் தேவையில் 3% தேவையை இவை பூர்த்தி செய்கின்றன.
  Published by:Muthukumar
  First published: