Home /News /national /

இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

Corona vaccine

Corona vaccine

சமீபத்திய ஓப்புதல்கள் மூலம் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது

    Corbevax, Covovax என்ற மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கும், Molnupiravir என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் இன்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கான அனுமதி அளிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் ஏற்கனவே 6 கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

    தற்போது Corbevax மற்றும் Covovax என்ற மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இது தவிர Molnupiravir என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் Molnupiravir மருந்தானது அவசர சிகிச்சை அல்லது ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

    Also read:  15-18 வயது சிறுவர்கள் தடுப்பூசி செலுத்த ஜனவரி 1 முதல் முன்பதிவு - தேவையான ஆவணம் என்ன?

    இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டேவியா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனாவுக்கு எதிரான போரில் இன்று ஒரே நாளில் Corbevax மற்றும் Covovax ஆகிய 2 தடுப்பூசிகள், Molnupiravir என்ற ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்து என 3 ஒப்புதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் அளித்திருக்கிறது Corbevax தடுப்பூசி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள 3வது தடுப்பூசியாகும். இது RBD protein sub-unit தடுப்பூசி வகையைச் சேர்ந்தது. ஹைதராபாத்தை சேர்ந்த Biological-E என்ற நிறுவனத்தால் இது உற்பத்தி செய்யப்படுகிறது.



    Corbevax இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள 3வது தடுப்பூசி என்பதால் இது ஒரு ஹாட்ரிக் சாதனையாகும். நானோ பார்டிகிள் வகை தடுப்பூசியான Covovax, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும்.

    Also read:  மேடையில் நாற்காலிக்காக சண்டை போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ

    வைரல் எதிர்ப்பு மருந்தான Molnupiravir, இந்தியாவில் 13 நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும். இது ஒரு வரையறுக்கப்பட்ட மருந்து, தீவிர நோய்த்தன்மையுடன் கூடிய நோயாளிகளுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படும்.

    பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார். மேற்கண்ட ஒப்புதல்கள், இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மேலும் வலுவூட்டுவதாய் அமையும். நம்முடைய மருந்து நிறுவனங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் சொத்தாகும்” இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    Also read:  அங்கிள் என அழைத்த 18 வயது பெண் மீது 35 வயது கடைக்காரர் சரமாரி தாக்குதல்

    சமீபத்திய ஓப்புதல்கள் மூலம் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கோவிஷீல்ட், கோவேக்ஸின், ZyCoV-D, ரஷ்யாவின் Sputnik V, அமெரிக்காவின் Moderna, Johnson and Johnson போன்ற 6 தடுப்பூசிகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

     

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Corona Vaccine, Covid-19 vaccine

    அடுத்த செய்தி