பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு

2035-ம் ஆண்டுக்குள் அதிக பொருாளதார வளா்ச்சி அடையும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை கைப்பற்றி இந்தியா தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.

Web Desk | news18
Updated: December 7, 2018, 2:36 PM IST
பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு
சூரத்தில் வைரம் தயாரிக்கும் இடம்
Web Desk | news18
Updated: December 7, 2018, 2:36 PM IST
உலக அளவில் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய நகரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதில் 3 இடங்களை தமிழக நகரங்கள் பிடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பொருளாதார ரீதியாக 2035-ம் ஆண்டுக்குள் உலகளவில் அதிகமான வளா்ச்சியடையக் கூடிய நகரங்கள் குறித்து ஆக்ஸ்போர்ட் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியடைந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிடித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு 2-வது இடமும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு 3-வது இடமும் கிடைத்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டன் இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

இதேபோல் தற்போதைய வளா்ச்சி விகிதத்தின் அடிப்படையில் வருகின்ற 2035-ம் ஆண்டுக்குள் அதிக பொருளாதார வளா்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை கைப்பற்றி இந்தியா தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த 3 நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

அந்த வகையில் வைர உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் சூரத் 9.17 சதவீத வளா்ச்சியுடன் முதல் இடத்திலும் 8.58 சதவீத வளா்ச்சியுடன் ஆக்ரா 2-வது இடத்திலும் உள்ளன.பெங்களூரு 3-வது இடத்திலும், ஹைதராபாத், நாக்பூர் நகரங்களுக்கு முறையே 4 மற்றும் 5-வது இடங்கள் கிடைத்துள்ளன.

பின்னலாடைத் தொழிலுக்கு புகழ்பெற்ற திருப்பூா் 6-வது இடத்திலும், ராஜ்கோட் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன. 8-வது இடம் திருச்சிக்கு கிடைத்த நிலையில், 9-வது இடத்தில் சென்னை உள்ளது. விஜயவாடா நகரருக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது.

உலக அளவில் வளர்ந்த நகரங்கள் பட்டியல்
Loading...
1. நியூயார்க்

2. டோக்கியோ

3. லாஸ் ஏஞ்சல்ஸ்

4. லண்டன்

அதிவேகமாக வளரும் டாப் 10 நகரங்கள்

1. சூரத் - 9.17%

2. ஆக்ரா - 8.58%

3.பெங்களூரு - 8.5%

4. ஹைதராபாத் - 8.47%

5. நாக்பூர் - 8.4%

6. திருப்பூர் - 8.36%

7.ராஜ்கோட் - 8.33%

8.திருச்சி - 8.29%

9. சென்னை - 8.17%

10. விஜயவாடா - 8.16%

Also see... பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண் - 4 பேர் கைது
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்