முகப்பு /செய்தி /இந்தியா / அருணாச்சலப் பிரதேச எல்லையில் அத்துமீறிய சீனப்படை... விரட்டியடித்த இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ

அருணாச்சலப் பிரதேச எல்லையில் அத்துமீறிய சீனப்படை... விரட்டியடித்த இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ

தவாங்

தவாங்

இந்நிலையில், தவாங் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • tawang, India

டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் யாங்சே செக்டரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) அத்துமீறிச் செல்ல சீனப் படைகள் முயன்றதாகவும் , அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

30 மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினரும் லடாக் செக்டாரில் உள்ள  எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் புதிதாக  பிரதேசத்தில் புதிதாக இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே அத்துமீறல் மற்றும் மோதல் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

இந்நிலையில், தவாங் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கம்பி வேலிகளை தாண்டி உள்ளே வர முயன்ற சீன வீரர்களை கம்புகளைக் கொண்டு இந்திய வீரர்கள் விரட்டியடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சீன வீரர்கள் பின்வாங்கிய நிலையில், இந்திய வீரர்கள் கொண்டாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்த வீடியோ-வை இந்திய அரசோ, ராணுவமோ உறுதிப்படுத்தவில்லை...

இந்நிலையில், இந்தியா- சீனா ராணுவத்தினரிடையேயான மோதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரினே ஜீன், மோதலிலிருந்து இருதரப்பினரும் உடனடியாக வெளியேறியதை வரவேற்பதாக தெரிவித்தார்.

நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், எல்லைப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஏற்கனவே உள்ள நடைமுறைகளை இந்தியா-சீனாவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

First published:

Tags: Arunachal Pradesh, China vs India