• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • படைகள் குவிப்பு குறித்து பேச்சுவார்த்தை: இந்திய கோரிக்கைகளை ஏற்க மறுத்தது சீனா!!

படைகள் குவிப்பு குறித்து பேச்சுவார்த்தை: இந்திய கோரிக்கைகளை ஏற்க மறுத்தது சீனா!!

இந்தியா- சீனா எல்லை  ..

இந்தியா- சீனா எல்லை ..

இந்தியா-சீனா எல்லையில் படை விலகல் குறித்து ராணுவ அளவில் நடந்த 13வது கட்ட பேச்சுவார்த்தையில் இந்தியா முன்வைத்த கோரிக்கைகளை சீனா ஏற்க மறுத்துள்ளது.

  • Share this:
    கிழக்கு லடாக் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய-சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்த இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் இதுவரை 12 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதன் அடிப்படையில் கிழக்கு லடாக்கிலுள்ள பாங்காங் சோ உள்ளிட்டப் பகுதிகளில் இருநாட்டு ராணுவங்கள் தங்கள் படைகளை பின்வாங்கின.

    எனினும், மேலும் சில இடங்களில் சீனா படைகளை குவித்துள்ளது. இதுகுறித்த 13வது சுற்று பேச்சுவார்த்தை சீனாவிலுள்ள மால்டோ என்ற இடத்தில் நேற்று எட்டரை மணி நேரம் நடைபெற்றது. இதில் daulat beg oldie, தெம்சாக் மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் சீனா, படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    துஷான்பேவில் அண்மையில் ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை மீறி சீனா தனது படைகளை எல்லையில் அதிகரித்துள்ளதுடன், இந்திய எல்லைக்குள் வர முயற்சிப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    மேலும் ஆக்கபூர்வமான பல கருத்துகளை இந்திய தரப்பு முன்வைத்தபோதும் அதனை சீன ராணுவம் ஏற்கவில்லை என்றும், இதனால் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் சீன ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய ராணுவம் தேவையில்லாத காரணங்களை காட்டுவதாகவும், ஏற்கமுடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் சுட்டிக்காட்டியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: