முகப்பு /செய்தி /இந்தியா / சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை.. அமைச்சர் ஜெய்சங்கருடன் முக்கிய ஆலோசனை!

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை.. அமைச்சர் ஜெய்சங்கருடன் முக்கிய ஆலோசனை!

ஆப்கானிஸ்தானில் இருந்து அவரது விமானம் புறப்பட்ட பின்னரே வாங் இ-யின் இந்திய வருகை குறித்து அறிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அவரது விமானம் புறப்பட்ட பின்னரே வாங் இ-யின் இந்திய வருகை குறித்து அறிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அவரது விமானம் புறப்பட்ட பின்னரே வாங் இ-யின் இந்திய வருகை குறித்து அறிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியா - சீனா எல்லை பதற்றத்திற்கு மத்தியில் இந்தியா வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம், கிழக்கு லடாக்கில் எல்லை பிரச்சனையில், இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே பேங்காங் சோ ஏரிப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருநாடுகளுக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் எதுவும் இந்தியாவில் நடைபெறவில்லை.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக, நேற்றிரவு டெல்லி வந்தடைந்தார். தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, சவுத் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சீன வெளியுறவு அமைச்சர் இன்று சந்தித்தார்.

’தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு கேட்ட பாஜக எம்எல்ஏக்கள்.. கெஜ்ரிவால் கொடுத்த பதிலடி!

அப்போது, இந்தியா - சீனா இடையே நடைபெற்று வரும் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, எல்லை பிரச்னை மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர் ஆகியவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் வாங்-யி இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் மோடியை சந்திக்கவும் அவர் நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் விவரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா வருவதற்கு முன்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு நேற்றைய தினம் சென்று வந்துள்ளார். தொடர்ந்து, இன்று இந்திய பயணத்தை முடித்துவிட்டு நேபாளம் செல்ல உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

வாங் இ-யின் இந்திய பயணம் குறித்து சீன அரசு சார்பிலோ, இந்திய அரசு தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அவரது விமானம் புறப்பட்ட பின்னரே அவரது இந்திய வருகை குறித்து அறிவிக்கப்பட்டது.

மேலும், பெரும்பாலான வெளிநாட்டு பிரமுகர்கள் இந்தியா வந்திறங்கும் பாதுகாப்பான இடத்திற்கு அருகிலுள்ள வணிக விமான நிலையத்திலிருந்து வாங்-இ வருகை தந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்த ஆண்டு இறுதியில் பெய்ஜிங்கில் நடத்தப்படும் பிரிக்ஸ் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை வாங்-இ அழைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: China, External Minister jaishankar, India