லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் 12,000 வீரர்கள்..

எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துமீறலை எதிர்கொள்ள தேப்சங் பகுதியில் 12 ஆயிரம் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் 12,000 வீரர்கள்..
கோப்புப்படம்
  • Share this:
இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே கடந்த 15-ஆம் தேதி ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, மீண்டும் அத்துமீறினால், அதனை எதிர்கொள்ள வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ராணுவத்தளபதி முகுந்த் நரவனே, லடாக் எல்லையில் 2 நாட்கள் ஆய்வு செய்தார். அங்குள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் சீனப்டைகள் மீண்டும் அத்துமீறலாம் என உளவுத்துறை தகவல்கள் வெளியாகின. இதையடுத்து லடாக் எல்லையில் 12 ஆயிரம் வீரர்களை இந்தியா தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்கள், அதிநவீன பீரங்கிகளும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. சுகோய் விமானங்கள், மிக் 29 போர் விமானங்களும் எல்லையை கண்காணித்து வருகின்றன.


இந்நிலையில் மெய்யான கட்டுப்பாட்டு பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளை நிறுத்தினால் மட்டுமே, எல்லைப்பிரச்னை தீரும் என சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.  பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், சீனா தனது படைகளை திரும்பப் பெற்று எல்லையில் அமைதி நிலவ வழிவகுக்க வேண்டும என்றும் வலியுறுத்தினார். கல்வான் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என்றும்,  இதுபோன்ற நடவடிக்கைகள் பிரச்னையை தீர்க்க உதவாது என்றும் அவர் எச்சரித்தார். மீண்டும் அத்துமீறும் பட்சத்தில் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் மிஸ்ரி கூறியுள்ளார்.

இதனிடையே, ஹாங்காங் சுதந்திரத்தை பறித்ததாகக் கூறி, சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அமெரிக்கா விசா வழங்காது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு நெருக்கடியாகவே கருதப்படுகிறது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading