சீன எல்லை அருகே போர் ஒத்திகை நடத்த இந்திய ராணுவம் திட்டம்... 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு

சீன எல்லை அருகே போர் ஒத்திகை நடத்த இந்திய ராணுவம் திட்டம்... 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
இந்திய ராணுவம்
  • News18
  • Last Updated: September 14, 2019, 8:17 AM IST
  • Share this:
எல்லையை காப்பது குறித்து, சீனா எல்லைக்கு அருகே முழு அளவிலான போர் ஒத்திகையை நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மலைப்பகுதி எல்லைகளை ஆக்கிரமிக்கும் எதிரிகளை விரட்டி அடித்து, எல்லையை காப்பது குறித்த யுத்தகள பயிற்சியை மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக கிழக்கு பிராந்திய ராணுவம் திட்டமிட்டு வந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் வருகிற அக்டோபர் மாதம் போர் ஒத்திகையை நடத்த ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி ஹிம் விஜய் என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சியில் முதல் முறையாக 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஒத்திகையின்போது மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா முகாமில் இருந்து சி 17, சூப்பர் ஹெர்குலஸ், ஏஎன் -32 ஆகிய விமானங்களோடு, அமெரிக்காவில் இருந்து புதிதாக வாங்கப்பட்டுள்ள சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மூலமும் வீரர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ள எம் -777 இலகு ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கே-9 வஜ்ரா, தனுஷ் ரக பீரங்கிகளை கொண்டும் தாக்கி பயிற்சி பெற திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் எல்லைக்கு அருகில் ஹிம் விஜய் போர் ஒத்திகை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also watch

First published: September 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading