• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்து தற்போது வரை நீட்டிக்கும் இந்தியா - சீனா எல்லை பிரச்னை - முழு பின்னணி

ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்து தற்போது வரை நீட்டிக்கும் இந்தியா - சீனா எல்லை பிரச்னை - முழு பின்னணி

(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)

1914ம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி ஹென்ரி மெக்மோஹனால் வரையறுக்கப்பட்ட எல்லையை சீனா இதுவரை அங்கீகரிக்கவில்லை.

  • Share this:
    உலகின் மிக பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதியாக இந்திய- சீனா எல்லை உருவாகியுள்ளது. ஆசியாவின் இருபெரும் அணு ஆயுத நாடுகள் அவற்றின் ராணுவங்களை இமயமலையில் குவித்துள்ளன.

    இந்தியா, சீனா நாடுகளிடையே ஆங்கிலேயர் காலம் தொட்டு எல்லைப் பிரச்னை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இமயமலையில் மூன்றாயிரத்து 500 கிலோமீட்டர் பரப்பளவிலான வரையறுக்கப்படாத எல்லையில், இருநாடுகளுக்கும் இடையே எப்போது பதற்றம் இருந்து வந்திருக்கிறது

    உலகின் மிக நீண்ட பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதியாகவும் இந்திய- சீனாவின் இமயமலை எல்லை கருதப்படுகிறது. 1914ம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி ஹென்ரி மெக்மோஹனால் வரையறுக்கப்பட்ட எல்லையை சீனா இதுவரை அங்கீகரிக்கவில்லை.மேலும் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை, தெற்கு திபெத் பகுதியின் ஒர் அங்கமாகவே சீனா கருதி வருகிறது.

    அதேபோல சீனா வசம் சென்ற லடாக் பகுதியின் அக்சய் சீன் பீடபூமியை, இந்தியாவும் சொந்தம் கொண்டாடி வருகிறது உலகின் மிக உயரமான எல்லையான, இந்திய - சீனாவின் இமயமலை எல்லை, கடல்மட்டத்தில் இருந்து 21 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தின் எல்லை கிழக்கிலும், சிக்கிமின் டோக்லாம் மத்தியிலும் மற்றும் லடாக் எல்லை மேற்கிலும் அமைந்துள்ளது. இதில் அருணாச்சல பிரதேசத்தின் எல்லை மட்டும் ஆயிரத்து 129 பரப்பளவு கொண்டது. மத்திய எல்லையான சிக்கிமின் டோக்லாம், 89 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

    அடுத்தபடியாக உள்ள ஜம்மு-காஷ்மீரின் லடாக் எல்லையின் பாங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் தான் இன்று பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் ஐந்து முறை நேரடி மோதல்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக 1962ம் ஆண்டு நடைபெற்ற இந்திய- சீன போரால் அக்சக் சீன் பகுதி சீனா வசம் சென்றது.



    அதேபோன்று 1967-ல் சிக்கிமின் நது லா பகுதியில் மோதல் நடைபெற்றது. 1975ல் அருணாச்சல பிரதேசத்தின் துலுங் லா பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதன்பிறகு 2017ல் டோக்லாமில், சீனாவின் சாலை அமைக்கும் பணிகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தபோது அங்கு மோதல் உருவானது. அதன்பின்பு இந்தாண்டு லடாக் எல்லையில் மோதல் வெடித்துள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: