லடாக்கில் 19,000 அடி உயரத்தில் சாலை அமைத்திருப்பதன் மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை பொலிவியாவிடம் இருந்து தட்டிப்பறித்திருக்கிறது இந்தியா.
விமானம் பறக்கும் உயரத்தில் பாதியளவுக்கு சாலையா? என்ன வியப்பாக இருக்கிறதா? இது நிஜம் தான். ஒரு கமர்ஷியல் விமானம் பறக்கும் உயரத்தின் பாதியளவு உயரத்துக்கு இந்திய எல்லை சாலைகள் நிறுவனம் (Border Roads Organisation - BRO) லடாக்கில் சாலை அமைத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வகையில் பொலிவியாவின் முந்தைய சாதனையையும் இந்தியா முறியடித்திருக்கிறது.
கிழக்கு லடாக்கின் உம்லிங்லா பாஸ் (Umlingla Pass) எனும் பகுதியில் 19,300 அடி உயரத்தில் 52 கிமீ நீள தார் சாலையை இந்திய எல்லை சாலைகள் நிறுவனம் கட்டமைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Also Read: கணவரை போட்டுத்தள்ள மனைவி எடுத்த விபரீத முடிவு!,, காவல்துறையினருக்கே ஷாக்!
உலகின் மிக உயரிய சிகரமான எவரெஸ்டின் அடிவாரத்தில் அமைந்துள்ள முகாம்களின் உயரத்தைக் காட்டிலும் இந்த உம்லிங்லா பாஸ் சாலை உயரமானதாகும். நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் தெற்கு அடிவார முகாம் 17,598 அடி உயரத்திலும், திபெத்தில் உள்ள வடக்கு அடிவார முகாம் 16,900 அடி உயரத்திலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெரிய கமர்ஷியல் விமானமானது சாதாரணமாக 30,000 அடி உயரத்தில் பறக்கும். ஆனால் இப்போது உம்லிங்லா பாஸ் சாலையானது இந்த விமானம் பறக்கும் உயரத்தின் பாதியைக் காட்டிலும் கூடுதலான உயரத்தில் சுமார் 19,300 அடி உயரத்தில் அமையப்பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.
Also Read: குதிரன் சுரங்கப்பாதை: தென்னிந்தியாவின் நீளமான குகைப்பாலம் எப்படி இருக்கு? – ஒரு நேரடி ரிப்போர்ட்!
முன்னதாக பொலிவியா நாட்டின் 18,953 அடி உயரத்தில் Uturuncu எரிமலைக்கு செல்லும் சாலையானது உலகின் உயரமான சாலை என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த பெருமையை லடாக்கின் உம்லிங்லா பாஸ் சாலை தட்டிப்பறித்திருக்கிறது.
உம்லிங்லா பாஸ் சாலையானது லடாக்கின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்ற காத்திருக்கிறது. லே பகுதியில் இருந்து Chisumle மற்றும் Demchok பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த 52 கிமீ சாலை புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இந்த சாலையின் மூலம் சுற்றுலாவும், சமூக பொருளாதாரமும் உயரும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் இந்த பகுதியில் குளிர் காலங்களில் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுவிடும். அப்படியொரு சவாலான சூழலில் இந்திய எல்லை சாலைகள் நிறுவனத்தின் ஊழியர்கள் இந்த சாலையை அமைத்திருப்பது அவர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் என்றே சொல்லியாக வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir, Ladakh