ஒரு கோடிக்கும் மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்திருந்த இந்தியா, இன்று தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் பல நாடுகளையும் நிலைகுலைய செய்திருக்கிறது. இந்தியாவில் முதல் அலையை விட இரண்டாவது அலை பரவல் பெரும் பாதிப்பையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே தற்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. முதலில் கோவேக்ஸின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்தது. இதனைக் கொண்டு முதலில் முன்கள பணியாளர்களுக்கும், பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அடுத்து 45 - 60 வயதினருக்கு, பின்னர் 18 முதல் 45 வயதினர் என ஒவ்வொரு கட்டமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்தது.
தடுப்பூசி தட்டுப்பாடுக்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் என வேறு சில தடுப்பூசிகளும் சந்தைக்கு வந்துள்ளன.
தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்த்தப்பட்டு வந்த நிலையில் கடந்த வெள்ளியன்று நாடு முழதும் முதல் முறையாக ஒரே நாளில் 1.09 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.
Also Read:
காபுலை விட்டு கடைசியாக வெளியேறும் முன் அமெரிக்க படையினர் செய்த ராஜதந்திரம் – தாலிபான்கள் அதிர்ச்சி!
இதனிடையே இன்று இந்தியா முழுதும் ஒரே நாளில் 1.09 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் இந்தியா தனது சொந்த சாதனையை முறியடித்திருப்பதாக சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. 1.09 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட தனது முந்தைய சாதனை இன்று முறியடித்திருக்கிறது. இன்று மாலை நிலவரப்படி 1.09 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னமும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்று எத்தனை பேருக்கு மொத்தமாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.