ஹோம் /நியூஸ் /இந்தியா /

உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக உருவெடுத்துள்ள இந்தியா..!

உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக உருவெடுத்துள்ள இந்தியா..!

உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக உருவெடுத்துள்ள இந்தியா..!

உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக உருவெடுத்துள்ள இந்தியா..!

5000 லட்சம் மெட்ரிக் டன் (LMT) கரும்புகளை உற்பத்தி செய்துள்ளதன் மூலம் ஒரே நேரத்தில் உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வோர் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  5000 லட்சம் மெட்ரிக் டன் (LMT) கரும்புகளை உற்பத்தி செய்துள்ளதன் மூலம் ஒரே நேரத்தில் உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வோர் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.

  முன்னதாக இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 2020-21 மார்க்கெட்டிங் ஆண்டில் 70 லட்சம் டன்னாகவும், 2019-20ல் 59 லட்சம் டன்னாகவும், 2018-19ல் 38 லட்சம் டன்னாகவும் இருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் துவங்கி இந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2021-22 மார்கெட்டிங் ஆண்டில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 57 சதவீதம் அதிகரித்து 109.8 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

  இதன் மூலம் இந்தியா உலகின் 2-வது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது என்று மத்திய உணவு அமைச்சகம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆதரவு சர்வதேச விலை (Supportive international prices) மற்றும் மத்திய அரசின் கொள்கை ஆகியவை இந்திய சர்க்கரைத் தொழிலின் இந்த சாதனைக்கு வழிவகுத்தது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு சுமார் ரூ.40,000 கோடி அந்நியச் செலாவணி கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  கடந்த அக்டோபர் முதல் இந்த செப்டம்பர் வரை நாட்டில் சுமார் 5,000 லட்சம் மெட்ரிக் டன் (LMT) கரும்புகள் உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதில் சுமார் 3,574 LMT சர்க்கரை ஆலைகளில் நசுக்கப்பட்டு சுமார் 394 LMT சர்க்கரை (சுக்ரோஸ்) உற்பத்தி செய்யப்பட்டது. இந்த 394 LMT சுக்ரோஸில் 35 LMT எத்தனால் உற்பத்திக்கு மாற்றப்பட்டது மற்றும் 359 LMT சர்க்கரை ஆலைகளால் உற்பத்தி செய்யப்பட்டது. சர்க்கரை உற்பத்தியில் சாதனை படைத்ததன் காரணமாக, உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

  நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் தகவல்படி, இந்திய சர்க்கரைத் துறைக்கு இந்த பருவம் சிறப்பானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கரும்பு உற்பத்தி, சர்க்கரை உற்பத்தி, சர்க்கரை ஏற்றுமதி, கரும்பு கொள்முதல், கரும்பு நிலுவைத் தொகை, எத்தனால் உற்பத்தி உள்ளிட்ட அனைத்திலும் இந்த சீசனில் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  2018-19 சீசனில் கடும் நிதி நெருக்கடியில் இருந்த சர்க்கரை துறையை மீட்டு தற்போது சாதனை படைக்கும் அளவிற்கு மாற்றி தன்னிறைவு அடைந்து இருப்பதற்கு கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  சுகர் சீசன் 2021-22-ன் போது, சர்க்கரை ஆலைகள் 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கரும்புகளை கொள்முதல் செய்ததாகவும், மத்திய அரசின் எந்த நிதி உதவியும் (மானியம்) இல்லாமல் ரூ.1.12 லட்சம் கோடிக்கு மேல் செலுத்தி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Read More: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனத்துக்காக 35 மணி பக்தர்கள் காத்திருப்பு

  இதன் மூலம் 2021-22 மார்கெட்டிங் ஆண்டின் இறுதியில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு நிலுவைத் தொகை ரூ.6,000 கோடியாக உள்ளது. இது ஏற்கனவே 95% கரும்பு நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான கரும்பு நிலுவைத் தொகை 99.9 சதவீதத்திற்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Export, Sugar