பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி இருக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி சர்வதேச அளவில் நம் நாடு ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக Bloomberg நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
பெரிய பொருளாதார (largest economy) நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை ஆறாவது இடத்திற்கு தள்ளி இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் பிரிட்டனை இந்தியா வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த 2019-ல், UK-வை பின்னுக்கு தள்ளி பெரிய பொருளாதார நாடாக வந்தது இந்தியா.
Bloomberg-ன் அறிக்கைபடி மார்ச் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதாரத்தின் அளவு 'நாமினல்' கேஷ் அடிப்படையில் 854.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதே நேரத்தில் இங்கிலாந்து நாட்டின் பொருளாதார அளவு 816 மில்லியன் டாலர்களாக இருந்தது. இந்த பொருளாதார அளவானது அட்ஜஸ்ட்டட் அடிப்படையிலும், தொடர்புடைய காலாண்டின் கடைசி நாளின் விகிதத்தில் டாலர் எக்ஸ்சேன்ச் ரேட்டை பயன்படுத்துவதன் அடிப்படையிலும் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தவிர சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களின்படி, முதல் காலாண்டில் இந்தியா தனது முன்னிலையை நீட்டித்துள்ளது.
முதல் காலாண்டிற்கான GDP டேட்டாவை மத்திய அரசு பகிர்ந்து கொண்ட 2 நாட்களுக்குப் பிறகு இந்த அப்டேட் வந்துள்ளது. ஜூன் 2022 காலாண்டில் (Q1FY23) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2021-22 Q1 இல் பதிவுசெய்யப்பட்ட 20.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 13.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அறிக்கைகளின்படி, நமது இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதமாக வளர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை ரிசர்வ் வங்கி மதிப்பிட்டதை விட குறைவாக இருக்கிறது. எனினும் வளரும் நாடுகளில் இந்த விகிதம் மிக அதிகமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகள் இந்தியா இந்த ஆண்டு டாலர் மதிப்பில் இங்கிலாந்தை முந்தியதை காட்டுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 11-வது இடத்தில் இருந்த அதே நேரம் இங்கிலாந்து 5-வது இடத்தில் இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனிடையே இங்கிலாந்து மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: அசுர வேகத்தில் வளர்ச்சி அடையும் யுபிஐ... ஆகஸ்ட் மாதத்தில் 10.73 லட்சம் கோடிக்குப் பரிவர்த்தனை!
ஏனென்றால் இங்கிலாந்தின் GDP இரண்டாவது காலாண்டில் பண அடிப்படையில் வெறும் 1% மட்டுமே வளர்ந்தது மற்றும் பணவீக்கத்தை சரிசெய்த பிறகு (adjusting for inflation) 0.1% சுருங்கியது. இந்த ஆண்டு இந்திய நாணயத்திற்கு எதிராக பிரிட்டனின் பவுண்டு 8% வீழ்ச்சியடைந்து, ரூபாயுடன் ஒப்பிடுகையில் ஸ்டெர்லிங்கும் டாலரின் மதிப்பை குறைத்துவிட்டது. 2024-ஆம் ஆண்டு வரை நீடித்திருக்கும் பொருளாதார மந்தநிலையின் அச்சுறுத்தலையும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து எதிர்கொள்கிறது. மாறாக இந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதத்துக்கும் அதிகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட பொருளாதாரத்தில் இந்தியா இப்போது பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.