• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உலகின் வல்லரசு நாடாக இந்தியா திகழ ராமர்தான் காரணம் – உ.பி. அமைச்சர்

உலகின் வல்லரசு நாடாக இந்தியா திகழ ராமர்தான் காரணம் – உ.பி. அமைச்சர்

ராமபிரான், லட்சுமி நாராயண் சவுத்ரி

ராமபிரான், லட்சுமி நாராயண் சவுத்ரி

ஒட்டுமொத்த உலகமே இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என ஆவலோடு காத்திருக்கிறது என்றார் லட்சுமி நாராயண் சவுத்ரி.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உலகிலேயே தலைசிறந்த நாடாக இந்தியா திகழ `ராமர்’ தான் காரணம் என்று உத்தரப் பிரதேச மத விவகாரங்கள் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி தெரிவித்தார்.

    அயோத்தி விவகாரம் தொடர்பாக லட்சுமி நாராயண் சவுத்ரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்: ``நாட்டை முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆண்டபோது அயோத்தி நகரம் கண்டுகொள்ளப்படவே இல்லை. மேலும், சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆனபோதும் அயோத்தி எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை.

    கடந்த 100 ஆண்டுகளில் அயோத்தி நகரில் எவ்வித சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்புதான், அயோத்தி நகரம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

    ராமர் ஓர் உதாரண புருஷர். அவரை யாருடனும் ஒப்பிடவே முடியாது. தலைசிறந்த மகனுக்கு உதாரணமாக, மாவீரனுக்கு உதாரணமாக அவர் திகழ்ந்தார். ராமரால் தான் இந்தியா, உலகின் வல்லரசு நாடாக திகழ்கிறது.

    அரசோ அல்லது பிற அமைப்புகளோ யாராக இருந்தாலும் சரி, பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டால், அந்த நகரத்தின் தொன்மை மீட்டெடுக்கப்படும். மேலும், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் அயோத்திக்கு வருவர். இதன்மூலம், அங்கு சுற்றுலா தொழில் வரும். ஒட்டுமொத்த உலகமே இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என ஆவலோடு காத்திருக்கிறது’’ என்றார் லட்சுமி நாராயண் சவுத்ரி.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: