"சேவக்: தி கன்ஃபெஷன்ஸ்" என்ற வலைத் தொடரின் ஸ்ட்ரீமிங்கிற்குப் பிறகு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட OTT பிளாட்ஃபார்ம் Vidly TV ஐ தடை செய்ய இந்திய அரசாங்கம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா கூறினார்.
இந்திய அரசாங்கம் கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, டிக் டாக், வீசாட் மற்றும் ஹெலோ போன்ற பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளங்கள் உட்பட 59 சீன மொபைல் பயன்பாடுகளை தடை செய்தது
அதைத் தொடர்ந்து அதேபோல் இந்திய இறையாண்மைக்கு எதிரான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் காரணத்தால் பாகிஸ்தான் ஸ்ட்ரீமிங் செயலியை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட Vidly TVயில், "சேவக்: தி கன்ஃபெஷன்ஸ்" எனும் வெப்-சீரிஸின் முதல் பாகத்தின் மூன்று எபிசோட்களை கடந்த நவம்பர் 26, 2022 அன்று வெளியிட்டது. பாகிஸ்தானின் இன்போ ஆப்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த வெப் சீரிஸில் உண்மைக்குப் புறம்பான மற்றும் சமூக அமைதியைக் குலைக்கும் உள்ளடக்கங்கள் இருப்பது காப்பாறியப்பட்டது.
இதையும் படிங்க : உலக அளவில் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பு - இந்தியாவில் நிலவரம் என்ன?
2008 ஆம் ஆண்டு நவம்பர் 26,அன்று பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் மும்பை தாக்குதல் நடத்தினர். அதே தேதியில் இது போன்ற ஒரு வெப்சீரிஸ் வந்திருப்பது கவனத்தை குவித்துள்ளது.
அதோடு அதன் காட்சிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிப்பதாக தீர்மானிக்கப்பட்டது. எனவே அதை இந்தியாவில் தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்தது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், IT விதிகள் 2021 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட விடிலி டிவி என்ற OTT செயலியை உடனடியாகத் தடுப்பதற்கான வழிமுறைகளை டிசம்பர் 12, 2022 அன்று வெளியிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.