இந்தியா & ஆஸி. இடையே மெய்நிகர் உச்சி மாநாடு - காணொலி காட்சி மூலம் இருநாட்டு தலைவர்கள் பங்கேற்பு

இந்தியா ஆஸ்திரேலியா இடையே காணொலி காட்சி மூலம் நடைபெற்ற மெய்நிகர் உச்சி மாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிஸன்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

  • Share this:
டெல்லியில் நடைபெற இருந்த இந்த மாநாடு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இருதரப்பு தலைவர்களும் காணொலி காட்சி மூலம் மாநாட்டில் பங்கேற்றனர்.

இதில் பாதுகாப்பு, வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், கொரோனா தொற்று பரவல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவுடன் உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதன் மூலம் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கு பலன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு சீரானதும் குடும்பத்துடன் இந்தியா வரவேண்டும் என மோரிஸனுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க...

கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் கொரோனா தொற்று பாதிப்பு 2000-ஐக் கடந்தது 

First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading