உலகலாவிய பசி பட்டியலில் இந்தியா 102-வது இடம்..! அண்டை நாடுகள் முன்னேறிய நிலையில் இந்தியா பின்னடைவு..!

இந்தியாவில் குழந்தைகள் வீணாக்கும் உணவு 20.8 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது. இது மிக உயர்வான சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது.

உலகலாவிய பசி பட்டியலில் இந்தியா 102-வது இடம்..! அண்டை நாடுகள் முன்னேறிய நிலையில் இந்தியா பின்னடைவு..!
பசி பட்டியலில் இந்தியா 102வது இடம்
  • News18
  • Last Updated: October 16, 2019, 12:46 PM IST
  • Share this:
உலக அளவில் 117 நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இந்தியா பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை நாடுகளின் பட்டியலில் 102 வது இடத்தைப் பெற்றுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் லாப நோக்கற்ற இரண்டு நிறுவனங்கள் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது. இந்தப் பட்டியல் படி 100 புள்ளிகள் வரை வழங்கப்படும் அதில் பூஜியம் பெறும் நாடு பசியின்மை கொண்ட நாடு என்றும் 100 புள்ளிகள் வரை பெறும் நாடுகள் மிகுந்த மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் இந்தியா 30.3 மதிப்பெண்கள் பெற்று பசியால் வாடும் நாடு என்றும் இந்த மதிப்பெண்ணைக் கருத்தில் கொண்டு அதிக அக்கறை காட்டுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் 76 நாடுகளில் 55 இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் (94) , பங்களாதேஷ் (88) மற்றும் நேபால் (73) முன்னேறிய நிலையில் உள்ளன.

பொதுவாக இந்தப் பட்டியல் குழந்தைகள் உணவை வீணாக்கும் அளவு, ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளின்யின் எடை மற்றும் உயரம் , குழந்தைகளின் இறப்பு விகிதம் , சத்தான உணவு என்பனவற்றைக் கருத்தில் கொண்டே இந்தப் பட்டியலை தயாரிக்கிறது.இந்த பட்டியலில் இந்தியாவில் குழந்தைகள் வீணாக்கும் உணவு 20.8 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது. இது மிக உயர்வான சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்தியா இன்னும் அதன் பசி அளவில் தீவிரமாக பின்னோக்கி செல்கிறது. இதை உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்