முகப்பு /செய்தி /இந்தியா / பிரிட்டனிடம் மீண்டும் அடைக்கலம் கேட்கும் விஜய் மல்லையா

பிரிட்டனிடம் மீண்டும் அடைக்கலம் கேட்கும் விஜய் மல்லையா

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

ஐரோப்பிய மனித உரிமை விதிகளின் மூன்றாவது பிரிவை பயன்படுத்தி பிரிட்டனிலேயே தொடர்ந்து தஞ்சமடைய விஜய் மல்லையா விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா அடைக்கலம் கேட்டால் அதனை பரிசீலிக்க வேண்டாம் என பிரிட்டனை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாத மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவர் மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் முடிந்த நிலையில், விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதால் அந்த நடவடிக்கை தாமதமாகி வருகிறது. இந்த சூழலில் ஐரோப்பிய மனித உரிமை விதிகளின் மூன்றாவது பிரிவை பயன்படுத்தி பிரிட்டனிலேயே தொடர்ந்து தஞ்சமடைய அவர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மனுவை பரிசீலிக்க வேண்டாம் என பிரிட்டனை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published:

Tags: Vijay Mallya