இந்திய வகை கொரோனா என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரே நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கொரோனா தன்னை உருமாற்றி கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது.
இதனை உருமாகிய கொரோனா என அவர்கள் கூறுகின்றனர். இதேபோல், பிரிட்டன் வகை கொரோனா, பிரேசில் வகை கொரோனா, இந்திய வகை கொரோனா என நாடுகளின் பெயரிலும் கொரோனா தொற்று அடையாளம் படுத்தப்படுகிறது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா உலகத்துக்கே ஆபத்து என கடந்த 11ம் தேதி உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகையை B.1.617 என உலக சுகாதார அமைப்பு கூறும் நிலையில், ஊடகங்கள் இந்திய வகை கொரோனா என குறிப்பிடுவதாக மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், சமூக ஊடகங்களுக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், B.1.617 வகை கொரோனாவை இந்திய வகை கொரோனா என குறிப்பிட்டு தவறான தகவல் பல்வேறு நாடுகளில் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
எனவே சமூக வலைத்தளங்கள், தங்கள் தளத்தில் இருந்து இந்திய வகை கொரோனா என குறிக்கிற பெயரையும், அதன் அனைத்து உள்ளடக்கங்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Social media, WHO