Home /News /national /

‘ரஷ்யாவும் உக்ரைனும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்’ : இந்தியா – பிரிட்டன் கூட்டாக வலியுறுத்தல்

‘ரஷ்யாவும் உக்ரைனும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்’ : இந்தியா – பிரிட்டன் கூட்டாக வலியுறுத்தல்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று இந்தியாவும், பிரிட்டனும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

நேட்டோ அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியனில் சேர்வதற்கு உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24-ம்தேதி ரஷ்யா போரை தொடங்கியது. இரு தரப்புக்கும் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், உக்ரைனை விட ரஷ்யா பிடிவாதமாக உள்ளது. போர் காரணமாக 70 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் உள் நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு பல அடிப்படையான தேவைகளை உக்ரைனும், ரஷ்யாவும் பூர்த்தி செய்து வருவதால், உலக நாடுகளுக்கும் உக்ரைன் ரஷ்யா போர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. போரை நிறுத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்ட நிலையில் பலன் ஏதும் ஏற்படவில்லை. ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தபோதிலும், வான்வெளி, ஏவுகனை தாக்குதல் நடத்தாமல் பெரும்பாலும் தரை வழி தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. தற்போது வரையில் சமாதானம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று குஜராத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று டெல்லி வந்த அவர் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையும் படிங்க - இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இம்ரான் கான் பாராட்டு!!

இரு தரப்பு விவகாரங்களை தவிர்த்து உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை மூலமாக சமாதானம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா என்பது பற்றி, விரிவாக பேசப்பட்டது. இதன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது உக்ரைனும், ரஷ்யாவும் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணத்தின்போது சுமார் 11 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மென்பொருள், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் 11 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி