முகப்பு /செய்தி /இந்தியா / நாட்டின் வேளாண் பொருள் ஏற்றுமதி 16 சதவீதம் உயர்ந்துள்ளது - மத்திய அமைச்சகம் தகவல்

நாட்டின் வேளாண் பொருள் ஏற்றுமதி 16 சதவீதம் உயர்ந்துள்ளது - மத்திய அமைச்சகம் தகவல்

இந்தியாவில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

இந்தியாவில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 17.43 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவின் வேளாண் பொருள் ஏற்றுமதி குறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை விரிவான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தின் மூலம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 17.43 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 15.07 பில்லியன் டாலர் அளவுக்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இலக்கு இந்த நிதியாண்டில் 23.56 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களில் மட்டும் இலக்கில் 74 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.இதில் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதியானது 32.60 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது. பருப்பு மற்றும் தாணிய ஏற்றுமதி 28.29 சதவீதம் உயர்ந்துள்ளது.இவற்றுடன் பாஸ்மதி அரிசி, பால் பொருள்கள், கோதுமை ஆகியவற்றின் ஏற்றுமதியும் கணிசமான உயர்வை கண்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், "விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்தும் நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் இணைந்து செயலாற்றி வருகிறோம். இதன் மூலம் தரமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவே மேம்பாட்டிற்கு காரணம்" என்று தெரிவித்தது.

First published:

Tags: Agriculture, Export, Trade