• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விபத்து இறப்புகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் குறைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும் - உலக வங்கி

விபத்து இறப்புகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் குறைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும் - உலக வங்கி

சாலை விபத்து

சாலை விபத்து

உலகில் வாகனங்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீத பங்களிப்பை கொண்டுள்ள இந்தியா, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு 10% ஆக உள்ளதாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
உலகில் வாகனங்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீத பங்களிப்பை கொண்டுள்ள இந்தியா, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு 10% ஆக உள்ளதாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்து தொடர்பான அறிக்கையை உலக வங்கி இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக உலக வங்கியின் தெற்காசியா பிரிவின் துணைத் தலைவர் Hartwig Schafer பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இன்று பேசினார்.

அப்போது, உலகில் வாகனங்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது இந்தியா, அதே நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு 10% ஆக உள்ளது. இது கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும் என தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பை பொறுத்தவரையில் இந்திய அரசு சமீப ஆண்டுகளில் பல கவனிக்கத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்திய அரசின் கவனம் மாறிய நிலையில், சாலை பாதுகாப்புக்கும் தொற்றுநோய்க்கும் இடையே இப்போது ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உள்ளது என குறிப்பிட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, சாலை விபத்துக்கள் குறையவில்லை, எந்த நேரத்திலும் மருத்துவமனைகளில் 10 சதவீத சிகிச்சை விபத்துக்குள்ளானவர்களுக்கு அளிக்கப்பப்பட்டு வருகிறது எனவும் சாலை விபத்துக்கள் உண்மையில் ஏழ்மையான மற்றும் மக்களின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைத் தாக்கும் என்று Schaferகூறினார்.

விபத்துகளின் காரணமாக பொருளாதார ரீதியிலான தாக்கம் நடுத்தர வீடுகளை விட ஏழை வீடுகளில் அதிகம். பராமரிப்பின் சுமையை கவனித்துக் கொள்ள வேண்டிய பெண்கள் மீது இது மிக அதிகம். இது சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், முறைசாரா துறையிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது "என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஒரு கேள்விக்கு பதிலளித்த ஷாஃபர், விபத்து இறப்புகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் குறைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும் என்று கூறினார்.

கடந்த ஆண்டு, இந்தியா தனது மோட்டார் வாகன சட்டத்தை திருத்தியது, இது நிதி, பாதுகாப்பு மற்றும் அமலாக்க அடிப்படையில் "நிறைய புதுமைகளைக் கொண்டுவருகிறது" என்று அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: