ஹோம் /நியூஸ் /இந்தியா /

இலங்கை அரசுக்கு எதிரான ஐநா தீர்மானம்.. இந்தியா வாக்களிக்காமல் புறக்கணிப்பு

இலங்கை அரசுக்கு எதிரான ஐநா தீர்மானம்.. இந்தியா வாக்களிக்காமல் புறக்கணிப்பு

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம்

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம்

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaGenevaGeneva

  விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில், மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.

  இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரில், விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதோடு, பலர் காணாமல் போயினர். இந்த மனித உரிமைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்கனவே பலமுறை தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டன. அதில், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டிருந்தன.

  ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அவையின் 51ஆவது மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்தன. எனினும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

  இதையும் படிங்க: ஹிஜாப் எதிர்ப்பு : ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக தலைமுடியை வெட்டிய பெண் எம்.பி

  அதேபோல், சீனாவில் உய்கர் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல் நடவடிக்கையை எடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தது. இந்த தீர்மானத்திலும் சீனாவுக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது.

  Published by:Kannan V
  First published:

  Tags: India, Sri Lanka, United Nation