75வது சுதந்திர தினம் - டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி

டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட 32 வீரர்களுக்கும் அழைப்பு சுதந்திர தினவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

 • Share this:
  நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

  நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சுதந்திர தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதைத்தொடர்து செங்கோட்டையில் காலை 7.30 மணியளவில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

  பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்ததும், விமானப்படையை சேர்ந்த இரண்டு Mi-17 ரக விமானங்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட 32 வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர், ராணுவம், தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர் பிரிவு, ஸ்வாட் கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், யமுனா நதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடந்தால் அதை முறியடிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: