சுதந்திர தின உரையில் ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி

ஒலிம்பிக் வீரர்கள் நமது இதயத்தை மட்டும் வெல்லவில்லை. எதிர்கால தலைமுறையினரை சாதிக்கத் தூண்டியுள்ளனர்.

 • Share this:
  சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

  சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதன் பின்னர் செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், மூவர்ண கொடியை அவர் ஏற்றி வைத்தார். பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்ததும், விமானப்படையை சேர்ந்த இரண்டு Mi-17 ரக விமானங்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். “ சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவில் கொள்ள வேண்டிய தினம் இது. டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்மைப் பெருமையடையச் செய்த வீரர்கள் இன்று நம்முடன் உள்ளனர். அவர்களது சாதனையை நாட்டு மக்கள் இன்று பாராட்ட வேண்டும். அவர்கள் நமது இதயத்தை மட்டும் வெல்லவில்லை. எதிர்கால தலைமுறையினரை சாதிக்கத் தூண்டியுள்ளனர்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: