Home /News /national /

101வது பிறந்தநாளை வெற்றிகரமாக கொண்டாடிய கமலம்மா... சுதந்திர போராட்டம் பற்றி பகிர்ந்த உணர்ச்சிமிகு தருணங்கள்.!

101வது பிறந்தநாளை வெற்றிகரமாக கொண்டாடிய கமலம்மா... சுதந்திர போராட்டம் பற்றி பகிர்ந்த உணர்ச்சிமிகு தருணங்கள்.!

கமலம்மா

கமலம்மா

Independence Day 2022 | திருப்பதியில் உள்ள கொர்லகுண்டாவைச் சேர்ந்த கமலம்மா, ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 101வது பிறந்தநாளை குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தின் சிறப்பான நமது சுதந்திர தினம் பற்றிய மறக்க முடியாத நிகழ்வுகளையும், அவர் நியூஸ்18 நெட்வொர்க்கிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tirupati, India
உலகம் முழுவதும் 100 வயதுக்கு மேல் ஆரோக்கியத்துடன் வாழும் முதியவர்கள் மிகச்சிலரே உள்ளனர். அதுவும் இந்தியாவில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான நபர்களே உள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கொர்லகுண்டாவைச் சேர்ந்த கமலம்மா, ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 101வது பிறந்தநாளை குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தின் சிறப்பான நமது சுதந்திர தினம் பற்றிய மறக்க முடியாத நிகழ்வுகளையும், அவர் நியூஸ்18 நெட்வொர்க்கிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விதமாக மத்திய அரசு அறிவித்துள்ள ‘ஆசாதி கா அம்ரித்’ இயக்கத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது தான் வசித்து வந்த இடத்தில் நடந்த சுதந்திர இயக்கம் மற்றும் கொண்டாட்டங்களின் தருணங்களை நியூஸ் 18 தொலைக்காட்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கமலாம்மா 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கோவில் நகரமான திருப்பதியில் முன்சாமிக்கும் சுப்பம்மாவுக்கும் மகளாகப் பிறந்தார். 5ம் வகுப்பு வரை படித்த கமலம்மாவிற்கும், தலைமைக் காவலராக பணியாற்றி வந்த கோபண்ணா என்பவருடன் 14 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் பிறந்துள்ளனர். இரண்டு பிள்ளைகளும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றுள்ளனர். பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்த இவரது மகன் பணியின் போதே உயிரிழந்துவிட்டார்.சின்ன வயதில் இருந்தே கமலம்மா பின்பற்றி வந்த வாழ்க்கை முறையும், அவரது உணவுப் பழக்க வழக்கமும் அவரை 101 வயதிலும் யாருடைய துணையும் இல்லாமல் தனது அன்றாட வேலைகளை தானே பார்த்துக்கொள்ளும் அளவிற்கு உறுதியாக்கியுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி அன்று கமலம்மாவிற்கு 100 வயது நிறைவடைந்து, 101வது வயதில் அடியெடுத்து வைத்ததை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

Also Read : நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தனி இடம் பிடித்த தென்னிந்திய சிங்கப்பெண்கள்! வரலாற்றுப் பார்வை

கமலம்மாவை பற்றி கூறும் போது அவர் குடும்பத்தினர் அவர் இரக்க குணம் மிக்கவர் என்றும், குடும்பத்தினர் மீது அளவு கடந்த பாசம் செலுத்தக்கூடியவர் என்றும் தெரிவிக்கின்றனர்.ஒட்டுமொத்த இந்தியாவும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்வை கொண்டாட தயாராகி வரும் நிலையில், சுதந்திர போராட்டம் நடந்த காலக்கட்டத்தை நினைவுகூர்ந்துள்ளார். “எங்களுடைய குடும்ப பழக்க வழக்கம் மற்றும் மரபுப்படி, சுதந்திர போராட்டங்களில் பங்கேற்க எனது பெற்றோர் என்னை அனுமதிக்கவில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட அன்றைய தினம் நாடே விழா கோலம் பூண்டிருந்தது. நகரங்கள், கிராமங்கள் என ஒவ்வொரு மூலையிலும் மக்கள் பண்டிகை கொண்டாடுவது போல், சுதந்திரத்தை வரவேற்றனர். அந்த மறக்கமுடியாத நாளில் சுதந்திரக் கொடியை ஏந்தியதை என்றுமே மறக்க முடியாது” என புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

Also Read : ஆகஸ்ட் 15-ல் சுதந்திரமடைந்த மற்ற நாடுகள்.. என்னென்ன தெரியுமா?

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு சிறப்பாக கொண்டாட மத்திய அரசு “அம்ரித் மகோத்சவ்” என்ற இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. மேலும் நாளை முதல் நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் இல்லம் தோறும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் 'ஹர் கர் திரங்கா' என்ற திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Independence day, India, Trending

அடுத்த செய்தி