கொரோனா போரில் முன்கள நாயகர்களுக்கு நாடே கடமைப்பட்டு இருக்கிறது - குடியரசுத்தலைவர் உரை

Independence Day 2020 | இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டு ஒளியாக மகாத்மா காந்தி இருந்தது நமக்கு மட்டுமே கிடைத்த அதிர்ஷ்டம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

கொரோனா போரில் முன்கள நாயகர்களுக்கு நாடே கடமைப்பட்டு இருக்கிறது - குடியரசுத்தலைவர் உரை
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • News18
  • Last Updated: August 14, 2020, 9:18 PM IST
  • Share this:
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். அப்போது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த அவர், இந்த நாட்டின் குடிமகன்கள் என்பதில் இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டு ஒளியாக மகாத்மா காந்தி இருந்தது நமது இந்தியாவுக்கு மட்டுமே கிடைத்த அதிஷ்டம் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழக்கம்போல் ஆடம்பரமாக இருக்காது என கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொடிய வைரஸால் பிடிக்கப்பட்டு, பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு வகையான இடையூறாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்கள நாயகர்களான மருத்துவர்கள், செவிலியர், சுகாதார ஊழியர்களுக்கு நாடே கடமைப்பட்டிருப்பதாக கூறியுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் இந்த நாட்டின் வீரர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், நமது அண்டை நாடு எல்லையை விரிவாக்கம் செய்யும் தவறான எண்ணத்துடன் செயல்பட்டு வருவதாக சீனாவை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார். எல்லையில் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு நாடே தலைவணங்குவதாகவும், மனித குலம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதை 2020ஆம் ஆண்டு உணர்த்தியிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading