அழிந்த வாக்குப்பதிவு அடையாள மை! இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கிய நெட்டீசன்கள்

வாக்குப் பதிவின்போது, வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு செய்ததற்கு அடையாளமாக விரலில் மை வைக்கப்படும். அந்த மையை அழிக்க முடியாது.

அழிந்த வாக்குப்பதிவு அடையாள மை! இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கிய நெட்டீசன்கள்
வாக்குப் பதிவின்போது, வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு செய்ததற்கு அடையாளமாக விரலில் மை வைக்கப்படும். அந்த மையை அழிக்க முடியாது.
  • News18
  • Last Updated: April 11, 2019, 9:06 PM IST
  • Share this:
வாக்காளர்களுக்கு கை விரலில் வைக்கப்படும் அழிக்க முடியாத மையை அழித்து, அந்தப் புகைப்படத்தை பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. முதல் கட்டமாக அருணாசலபிரதேசம், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.வாக்குப் பதிவின்போது, வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு செய்ததற்கு அடையாளமாக விரலில் மை வைக்கப்படும். அந்த மையை அழிக்க முடியாது. சில நாள்கள் கழித்து அதுவே அழியும் தன்மை கொண்டதாக இருக்கும். இன்றைய வாக்குப் பதிவுக்குப் பிறகு, நிறைய பேர் மை அழிந்ததை புகைப்படமாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுவருகின்றனர்.அதனையடுத்து, நொய்டாவைச் சேர்ந்த நியூஸ் 18 செய்தியாளர் வாக்களித்தப் பிறகு, மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். கை விரலில் வைக்கப்பட்ட மை அழிந்துள்ளது. சிலர், கை விரலில் வைக்கப்பட்ட மையை அழிப்பதை வீடியோவாக எடுத்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading