மின்சார வாகனப் பயன்பாடுகள் அதிகரித்தால் பெட்ரோல், டீசல் இறக்குமதி குறையும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பெட்ரோல், டீசல் கார்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்தினால் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நாடு முழுவதும் மின்சார வாகனங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிவைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதிகட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘மின்சார பயன்பாட்டில் செல்லுங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்(go electric campaign) நாடு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் சூழலைக் குறைக்கும். 8 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருள்களுக்கு சிறந்த மாற்று மின்சார எரிபொருள்தான்.

  பெட்ரோல், டீசல் எரிபொருள்களை ஒப்பிடும்போது மின்சார எரிபொருளின் செலவு குறைவு. புகை உமிழ்வு குறையும். சொந்த நாட்டில் உற்பத்தி செய்யமுடியும். உயிரிக் கழிவுகள், விவசாயக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பதை மின்சாரத்துறை ஊக்குவிக்கவேண்டும்.

  அது நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும். அரசு அதிகாரிகள் மின்சார வாகனங்கள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவேண்டும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: