நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மையால் இந்தியாவின் எதிர்காலம் கவலை அளிப்பதாக பாஜக எம்.பி. வருண் காந்தி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மக்களவை தொகுதியின் பாஜக எம்.பி. வருண் காந்தி, தனது தொகுதியில் நலத்திட்ட பணிகளை பார்வையிட்டார். இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-
நாட்டில் 1.5 கோடி பணியிடங்கள் காலியாக இருந்தாலும், வேலையில்லாத இளைஞர்கள் வெறும் வயிற்றில் அலைகின்றனர். கோடிக்கணக்கான வேலையில்லாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
இதையும் படிங்க - ராஜினாமா கடிதம் கொடுத்த ஈஸ்வரப்பா.. உண்மை வெளி வரும் என முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி
அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நமது அரசியலமைப்பு கூறுகிறது. அது எல்லோருடனும் ஒருங்கிணைந்து வேலை செய்யும் போது சாத்தியமாகும்.
எவருக்கும் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை, 2 கோடி வேலைகள் வாக்குறுதி அளித்தபடி வழங்கப்படவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்பதும் நடக்கவில்லை.
இதையும் படிங்க - 2024 தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் இலக்கு... வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டமே நமது நாட்டின் உண்மையான போராட்டம் ஆகும். அரசியல் கட்சிகளும் தலைவர்களும் போட்டியை விட்டுவிட்டு நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் பேச்சு வார்த்தைகளாலோ, தேர்தலில் வென்று தோல்வியாலோ உருவாக்கப்படவில்லை. உண்மையான சேவை மூலமாகத்தான் இந்தியாவின் எதிர்காலம் உருவாக்கப்படுகிறது.
அதிகரித்துள்ள வேலையின்மையால் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். இங்கே தேவைகள் அதிகமாகவும், வளங்கள் குறைவாக உள்ளன. தனியார்மயமாக்கல் நடக்கும் போது, காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டு, வேலையின்மை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.