Home /News /national /

மே 3ஆம் தேதி உஷாராக இருங்கள் - மாநிலங்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை... காரணம் என்ன?

மே 3ஆம் தேதி உஷாராக இருங்கள் - மாநிலங்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை... காரணம் என்ன?

2018 முதல் 2020 காலகட்டத்தில் நாடு முழுவதும் 1,809 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2018 முதல் 2020 காலகட்டத்தில் நாடு முழுவதும் 1,809 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2018 முதல் 2020 காலகட்டத்தில் நாடு முழுவதும் 1,809 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    வரும் மே 3ஆம் தேதி அக்ஷய திருதியை என்பதால் நாடு முழுவதும் பல இடங்களில் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெறலாம் என எச்சரித்துள்ளது.

    நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முதன்மை செயலாளர்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், வரும் மே 3ஆம் தேதி நாடு முழுவதும் பல இடங்களில் குழந்தை திருமணம் நடைபெறலாம் என எச்சரித்துள்ளது.

    அக்ஷய திருதியை அன்று உஷார்

    குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எழுதியுள்ள அக்கடிதத்தில், " நாடு முழுவதும் மே 3ஆம் தேதி அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாட்டின் பல மாநிலங்களில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறலாம் என ஆணையத்திற்கு தகவல் வெளியாகியுள்ளது.எனவே, அனைத்து பகுதிகளிலும் உஷார் நிலையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இது தொடர்பாக கிராம பஞ்சாயத்துகள், வார்டுகள், மாவட்டங்கள், நகராட்சிகள் என அனைத்து மட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை குழந்தைகள் மேம்பாட்டு அலுவலர்கள், திருமணம் நடத்தி வைக்கும் மத தலைவர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு பணிகளை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு முன்னதாகவே நடத்தி முடிக்க வேண்டும் எனக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூடுதல் நடவடிக்கைகள்

    மேலும் அக்கடிதத்தில், வகுப்புக்கு முறையாக வராத மாணவர்களின் பட்டியலை பள்ளி வாரியாக எடுத்து அதை ஆணையத்தின் முன் சமர்பிக்க வேண்டும். குழந்தை தொழிளார் தடுப்புச் சட்டம் 2017இன் படி இந்த கணக்கெடுப்பு அவசியம். இந்த நடவடிக்கைகள் மற்றும் இது தொடர்பான முன்னெற்படுகள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் தயார் செய்து வைக்க வேண்டும். அலுவலர்கள் தயாரித்து வைத்த அறிக்கையை ஆன்லைன் மூலம் ஆணையம் ஆய்வு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க - கேரள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு? - செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பு

    கோவிட் பெருந்தொற்று தாக்கம் காரணமாக நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. 2018 முதல் 2020 காலகட்டத்தில் நாடு முழுவதும் 1,809 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அருணாசலப் பிரதேசத்தில் 341, மேற்கு வங்கத்தில் 236, கர்நாடகாவில் 217 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு 190 வழக்குகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Child marriage

    அடுத்த செய்தி