மும்பையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி 15-ம் வரை கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் ஊரங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 15-ம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாலை 5 மணி வரை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு போடப்படும். அதன்பின்னர், தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் அடிப்படையில் மும்பை மாநகரம் குறைந்தது 12 மணி நேரத்திற்கு ஊரடங்கில் நீடிக்கும். இதேபோன்று மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கும் தட விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், 'மும்பையில் கொரோனா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரம் புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடைய வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மனித உயிர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த தவிர்க்க முடியாத நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால் அதை தடுப்பதற்காக இன்று மாலை முதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.
இதையும் படிங்க : டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!
மும்பையில் இன்றைக்கு மட்டும் 198 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,368 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை விட 37 சதவீதம் அதிகம்.
இதையும் படிங்க : உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!
ஏற்கனவே கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போது மும்பையும், மகாராஷ்டிராவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க : லாக்டவுன் விதிமீறியவர்களை துப்பாக்கி முனையில் ஊர்வலம் அழைத்துச்சென்று அவமதித்த சீன போலீசார்
மகாராஷ்டிராவில் மட்டும் 450 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 960 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளது.
புதிது புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருவதால், மும்பை மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மீண்டும் பழையபடி போர்க்கால அடிப்படையில் மருத்துவமனைகள் அலெர்ட் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.