ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு... 4-வது அலை ஏற்படுமா? மூத்த விஞ்ஞானி விளக்கம்

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு... 4-வது அலை ஏற்படுமா? மூத்த விஞ்ஞானி விளக்கம்

பொது இடங்களில் முகமூடி அணிவதை டெல்லி அரசு நேற்று முதல் கட்டாயமாக்கியுள்ளது. இதனை, மீறுபவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகமூடி அணிவதை டெல்லி அரசு நேற்று முதல் கட்டாயமாக்கியுள்ளது. இதனை, மீறுபவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகமூடி அணிவதை டெல்லி அரசு நேற்று முதல் கட்டாயமாக்கியுள்ளது. இதனை, மீறுபவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், 4-வது அலை ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த விஞ்ஞானி கங்காகேத்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பரவல் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்க்கான முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேத்கர் நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

"நாடு முழுவதும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனை 4 வது அலை என்று நான் கருதவில்லை. நம்மில் சிலர் முக கவசம் அணிவதில்லை. இதை வேறுவிதமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் கொரோனா தொற்றைப் பெறுவதற்கு பயப்படுவதில்லை.

இதையும் படிங்க - ஒரே நாளில் 66% அதிகரித்த கொரோனா - இந்தியாவில் 2,067 பேருக்கு தொற்று

இதுவரை புதிய திரிபு எதுவும் தோன்றவில்லை. வயதானவர்கள், தடுப்பூசிகள் எடுக்காதவர்கள், இதுவரை நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள், கட்டமாயமாக மாஸ்க்கை அணிய வேண்டும். புதிதாக ஒமைக்ரான் திரிபு ஏதும் கண்டறியப்படவில்லை. இதன் அடிப்படையில் 4வது அலை ஏதும் ஏற்பட வாய்ப்புகள் கிடையாது. இருப்பினும் மக்கள் இன்னும் சில காலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கங்காகேத்கர் இந்த விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பொது இடங்களில் முகமூடி அணிவதை டெல்லி அரசு நேற்று முதல் கட்டாயமாக்கியுள்ளது. இதனை, மீறுபவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - லிவ் இன் டூகெதர் உறவுகளால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது

கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்திய ஆலோசனையில், பள்ளிகளை மூட வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நிபுணர்களுடன் கலந்தாலோசித்து புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூகக் கூட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், டெல்லியில் கொரோனா உறுதி செய்யும் சோதனையை அதிகரிக்கவும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்களில் பரவலாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அரசின் அதிரடி நடவடிக்கைகளால் டெல்லியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Corona, Corona Mask