உயர்கிறதா பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது?

மாதிரி படம்

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

 • Share this:
  இந்தியா முழுவதும் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களுக்கு 21ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர், மோடி, இளம் வயது கர்ப்பிணிகள், ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதை தடுக்க, அவர்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, சமதா கட்சி முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி மற்றும் நிதி ஆயோக்கின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

  இந்த குழுவினர், பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து, கடந்த மாதம் பிரதமர் அலுவலகத்திற்கும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் அறிக்கை வழங்கியுள்ளனர். அதில், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பிரசவத்தின் போது கர்ப்பிணிகள் மரணமடைவதை தவிர்க்கலாம் என கூறுகின்றனர். அதேபோல், தனக்கான துணை யார் என்பதை முடிவு செய்ய பெண்களுக்கும் ஒரு முதிர்ச்சி கிடைக்கும் என மன நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க... தங்கம் விலை ரூ.40,000க்கு கீழ் சரிவு.. அமெரிக்க டாலர் சரிந்ததன் எதிரொலியா?

  இந்நிலையில், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் வகையில் சட்டத் திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: