ஹோம் /நியூஸ் /இந்தியா /

Headlines Today : நெல், சோளம், பருப்பு போன்றவற்றின் கொள்முதல் விலை உயர்வு.. - தலைப்புச் செய்திகள் (ஜூன் 9, 2022)

Headlines Today : நெல், சோளம், பருப்பு போன்றவற்றின் கொள்முதல் விலை உயர்வு.. - தலைப்புச் செய்திகள் (ஜூன் 9, 2022)

Headlines Today : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Headlines Today : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Headlines Today : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

  சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு, இணையதள வசதியை தரும் பாரத் நெட் திட்டத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

  பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தாங்களே எதிர்க்கட்சி என கூறி வந்தாலும், தமிழ் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

  கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றினால் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  வாக்கு வங்கி அரசியலுக்காக நலத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்துவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெறுகிறது.

  பொறியியல் படிப்புகளில் எற்படும் காலி இடங்களை குறைக்க நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை 24 மணி நேரமும் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  கோயில்களில் உள்ள உண்டியல்கள் மீது மட்டுமே இந்து சமய அறநிலையத்தை துறைக்கு அக்கறை உள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

  நீர் புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்ட பின்பு தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளிடம் மீண்டும் நிலத்தை ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  கடலூரை சேர்ந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவ கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியனின் தூக்கு தண்டனை ஆயுள் சிறையாக குறைக்கப்பட்டுள்ளது.

  சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்கு வழக்குகளை தீட்சிதர்கள் காண்பிக்க மறுத்த நிலையில், இரண்டாவது நாளாக இந்து சமய அறநிலைய அதிகாரிகள் கோயிலில் முகாமிட்டுள்ளனர்.

  கொரோனா முன்னெச்சரிக்கையாக விமான நிலையங்கள் மற்றும் விமானத்திற்குள் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

  சிறையில் வேலை செய்ததற்கு சசிகலாவிற்கு ஒரு ரூபாய் கூட ஊதியம் வழங்கப்படவில்லை என்று பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  வயதான தாயாருக்கு பணிவிடை செய்ய தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று, ஆயுள் தண்டனை கைதி சாந்தன், தமிழக ஆளுநருக்கு மனு அளித்துள்ளார்

  டெல்லியில் வீட்டுப்பாடம் எழுதாத 5 வயது சிறுமியை, அவரது தாயாரே மொட்டை மாடியில் சுட்டெரிக்கும் வெயில் கட்டிவைத்து சித்திரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  குஜராத் மாநிலம் சுரேந்திராநகர் மாவட்டத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில், விழுந்த 18 மாத குழந்தையை, ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

  வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவிகிம் உயர்ந்துள்ளது.

  இந்தோனேசியாவில் உயிரியல் பூங்காவில் ஒராங்குட்டான் குரங்கை உதைக்க முயன்றவரின் காலை, குரங்கு இறுக்கிப்பிடித்து கடித்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எரிபொருள் வாங்க இந்தியாவை தவிர வேறு யாரும் பணம் வழங்குவதில்லை என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

  பாகிஸ்தானில் மின்சாரத்தை மிச்சப்படுத்த திருமண நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல், சந்தைகள் இரவு 8.30 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

  Must Read : கோயில் உண்டியல் மீதே அறநிலையத்துறைக்கு அக்கறை உள்ளது - அண்ணாமலை பேச்சு

  இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காயத்தால் லோகேஷ் ராகுல் விலகியதால் ரிஷப் பந்த் அணியை வழிநடத்துகிறார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News