சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் புக்கிங்கை குறைக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை சன்னிதானம் செல்லும் பாதையில் மரக்கூட்டம் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போலீசார் மற்றும் பக்தர்கள் காயமடைந்த நிலையில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு மூலம் அரசிடம் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.
மேலும், பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தேவசம் போர்டுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கான்வாய் வாகனத்தில் பயணித்த மேயர்... இதுதான் சுயமரியாதையா? - அண்ணாமலை விமர்சனம்..!
அதன்படி சபரிமலை தந்திரியிடம் ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து தேவசம்போர்டு தரிசன நேரத்தை அரை மணி நேரம் நீட்டித்தது.
தினமும் பக்தர்கள் வருகை ஒரு லட்சத்தை தாண்டிய சூழ்நிலையில் நீதிமன்றம் தலையிட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் அதிகரித்து வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுகொண்டது.
மேலும், சன்னிதானம் அருகே மரக்கூட்டம் பகுதியில் ஏற்பட்ட விபத்து குறித்து தேவசம் கமிஷனரிடம் உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவைக் குறைக்க காவல்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தினசரி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். இதை தினசரி முன்பதிவு 85000 ஆக குறைக்க காவல்துறை முடிவெடுப்பதாக தெரிகிறது.
எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக போலீஸ் - தேவசம்போர்டு உயர்நிலைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayyappan temple in Sabarimala, Kerala, Kerala police, Sabarimala Devasam board, Sabarimala devotees, Tamilnadu