பால் தினகரன் வீட்டிலிருந்து 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!
ரிசர்வ் வங்கி அனுமதியின்றி 100 கோடி ரூபாயை வெளிநாடுகளில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- News18 Tamil
- Last Updated: January 23, 2021, 10:57 PM IST
மதபோதகர் பால் தினகரன் வீட்டிலிருந்து 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்குச் சொந்தமான 28 இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பால் தினகரனின் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரிசர்வ் வங்கி அனுமதியின்றி 100 கோடி ரூபாயை வெளிநாடுகளில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பால் தினகரன் வருவாயை குறைத்துக் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் விசாரணைக்கு பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் செய்யப்பட்ட முதலீடு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பால் தினகரன் குடும்பத்தினர் NRI பிரிவில் வருவதால் வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் குறித்த தகவல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.